• Sep 20 2024

நீதித்துறையே மக்களின் இறுதி நம்பிக்கை – அதன் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் – திகாம்பரம்! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 7:10 pm
image

Advertisement

” முல்லைதீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜாவின் இராஜினாமாவானது, நாட்டின் சட்டத்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.” என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” ஒரு நாட்டின் நீதித்துறை என்பது பிரஜைகளின் இறுதி நம்பிக்கைக்குரிய இடமாகும். நீதித்துறை அரசியல் அழுத்தங்களுக்குட்படும்போது நீதித்துறை சுயாதீனமாக இருக்க முடியாது. எமது நாட்டில் அத்தகைய ஒரு சூழ்நிலையே உருவாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனமாக விளங்கியதன் காரணமாகவே பாராளுமன்ற பிணக்குகளுக்குகூடு தீர்வு காணப்பட்டது. ஆனால் தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜா இராஜினாமா செய்திருப்பது நீதித்துறையில் அரசியல் தலையீட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

சட்டமா அதிபரின் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் என்பன அடிமட்ட நம்பிக்கையினை தகர்க்கக்கூடியது. எனவே ஜனாதிபதி இதுத்தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.


நீதித்துறையே மக்களின் இறுதி நம்பிக்கை – அதன் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் – திகாம்பரம் samugammedia ” முல்லைதீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜாவின் இராஜினாமாவானது, நாட்டின் சட்டத்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.” என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,” ஒரு நாட்டின் நீதித்துறை என்பது பிரஜைகளின் இறுதி நம்பிக்கைக்குரிய இடமாகும். நீதித்துறை அரசியல் அழுத்தங்களுக்குட்படும்போது நீதித்துறை சுயாதீனமாக இருக்க முடியாது. எமது நாட்டில் அத்தகைய ஒரு சூழ்நிலையே உருவாகியுள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனமாக விளங்கியதன் காரணமாகவே பாராளுமன்ற பிணக்குகளுக்குகூடு தீர்வு காணப்பட்டது. ஆனால் தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜா இராஜினாமா செய்திருப்பது நீதித்துறையில் அரசியல் தலையீட்டினை வெளிப்படுத்தியுள்ளது.சட்டமா அதிபரின் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் என்பன அடிமட்ட நம்பிக்கையினை தகர்க்கக்கூடியது. எனவே ஜனாதிபதி இதுத்தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement