• Sep 19 2024

கம்பியைக் கடித்து iPhone-ஐத் திருடிய பெண்! samugammedia

Tamil nila / Sep 30th 2023, 6:54 pm
image

Advertisement

சீனாவில் ஒரு பெண் iPhone-ஐத் திருட புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்.

முதலில் கையால் iPhone-களுடன் இணைந்திருக்கும் பாதுகாப்புக் கம்பியை அகற்ற அவர் முயன்றார்.அது முடியாதபோது அவர் அதைக் கடிக்க ஆரம்பித்ததாக South China Morning Post தெரிவித்தது.

இறுதியில் iPhone14 Plus-ஐத் திருடிவிட்டுக் கடையைவிட்டு வெளியேறினார். அவர் கடையைவிட்டு வெளியேறியபோது திருட்டு நேர்ந்துள்ளதைக் குறிக்கும் சமிக்ஞை ஒலித்தது.

ஆனால் கடை ஊழியர்கள் அது போலி சமிக்ஞை என்று நினைத்து அதனை நிராகரித்தனர்.

அந்தப் பெண்ணை அரை மணிநேரத்துக்குள் காவல்துறையினர் கண்டுபிடித்ததாக South China Morning Post தெரிவித்தது. அந்தப் பெண் அண்மையில் தனது கைத்தொலைபேசி தொலைந்துபோனதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

புதிய கைத்தொலைபேசியின் விலை அதிகம் என்பதால் அதைத் திருட முடிவெடுத்ததாகவும் சொன்னார். தற்போது அந்தப் பெண் தடுப்புக்காவலில் இருக்கிறார்.





கம்பியைக் கடித்து iPhone-ஐத் திருடிய பெண் samugammedia சீனாவில் ஒரு பெண் iPhone-ஐத் திருட புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்.முதலில் கையால் iPhone-களுடன் இணைந்திருக்கும் பாதுகாப்புக் கம்பியை அகற்ற அவர் முயன்றார்.அது முடியாதபோது அவர் அதைக் கடிக்க ஆரம்பித்ததாக South China Morning Post தெரிவித்தது.இறுதியில் iPhone14 Plus-ஐத் திருடிவிட்டுக் கடையைவிட்டு வெளியேறினார். அவர் கடையைவிட்டு வெளியேறியபோது திருட்டு நேர்ந்துள்ளதைக் குறிக்கும் சமிக்ஞை ஒலித்தது.ஆனால் கடை ஊழியர்கள் அது போலி சமிக்ஞை என்று நினைத்து அதனை நிராகரித்தனர்.அந்தப் பெண்ணை அரை மணிநேரத்துக்குள் காவல்துறையினர் கண்டுபிடித்ததாக South China Morning Post தெரிவித்தது. அந்தப் பெண் அண்மையில் தனது கைத்தொலைபேசி தொலைந்துபோனதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.புதிய கைத்தொலைபேசியின் விலை அதிகம் என்பதால் அதைத் திருட முடிவெடுத்ததாகவும் சொன்னார். தற்போது அந்தப் பெண் தடுப்புக்காவலில் இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement