வரலாற்று பிரசித்தி பெற்ற இராஜ மூர்த்தமாக முருகன் எழுந்தருளியிருக்கும் யாழ்ப்பாணம்- மாவிட்டபுரம் பெரிய கோயில் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நாளான இன்றையதினம்(11) இடம்பெறுகின்றது.
ஆயிரத்து முன்னூறு ஆண்டு பழைமை வாய்ந்த மாவை ஆதீனத்தின் நிர்வாகத்திலிருக்கும் இத்திருக்கோயிலில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்று(11) மஹா கும்பாபிஷேகம் நிகழ்கிறது.
மகாகும்பாவிசேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
அதேவேளை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் நேற்றையதினம் மாலை வரை இடம்பெற்றது.
இந்நிலையில் இன்றையதினம் அதிகாலை 03.30 மணி முதலாக விநாயக வழிபாடு யாகபூஜை தீபாராதணைகள் என்பன இடம்பெற்று கலச அபிசேகம் கும்பாவிசேக நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
பல ஆண்டுகளுக்கு பிற்பாடு இடம்பெறும் மாவைக் கந்தனின் கும்பாவிசேக நிகழ்வை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது ஆலயத்தில் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்ற மாவைக் கந்தனின் கும்பாபிஷேக நிகழ்வு. வரலாற்று பிரசித்தி பெற்ற இராஜ மூர்த்தமாக முருகன் எழுந்தருளியிருக்கும் யாழ்ப்பாணம்- மாவிட்டபுரம் பெரிய கோயில் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நாளான இன்றையதினம்(11) இடம்பெறுகின்றது.ஆயிரத்து முன்னூறு ஆண்டு பழைமை வாய்ந்த மாவை ஆதீனத்தின் நிர்வாகத்திலிருக்கும் இத்திருக்கோயிலில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்று(11) மஹா கும்பாபிஷேகம் நிகழ்கிறது.மகாகும்பாவிசேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. அதேவேளை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் நேற்றையதினம் மாலை வரை இடம்பெற்றது.இந்நிலையில் இன்றையதினம் அதிகாலை 03.30 மணி முதலாக விநாயக வழிபாடு யாகபூஜை தீபாராதணைகள் என்பன இடம்பெற்று கலச அபிசேகம் கும்பாவிசேக நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.பல ஆண்டுகளுக்கு பிற்பாடு இடம்பெறும் மாவைக் கந்தனின் கும்பாவிசேக நிகழ்வை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது ஆலயத்தில் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.