• May 12 2026

சங்கு கலைக்கழகத்தின் நிலமே எங்கள் நிலைக்களம் வீதி நாடக ஆற்றுகை!

shanu / May 12th 2026, 9:41 am
image


சங்கு கலைக்கழகத்தின் வீதி நாடக குழுவினர்களால் மலையக மக்களுடைய காணி உரிமை தொடர்பான ஆற்றுகை பன்மூர் தோட்டத்தில்  நேற்று ஆற்றுகை  செய்யப்பட்டது.


இந்நாடக ஆற்றுகையை சங்கு கலைக்கழகம் மற்றும் சிட்ப்ஸ் நிறுவனம் இணைந்து தங்கள் மக்களுடைய நில உரிமை பிரச்சனைகளை  எண்ணக் குமுறல்களை  விழிப்புணர்வு செய்வதற்காக முன் நின்று பல வீதி பிரச்சாரங்களையும் முன்னெடுத்தனர்.


மற்றும் 203 வருட கால மலையக மக்களுடைய வருகையும் வாழ்வையும் அவர்களுடைய எண்ணக் குமுறல்களையும் 30 நிமிட வீதி நாடக ஆற்றலுக்குள் ஆற்றுகை செய்தமையானது  பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக  பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். 


மேலும் எதிர்கால சந்ததியினர் அவர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அடிப்படையாக அவர்களுடைய காணி உரிமைகள் பற்றிய தெளிவுகளையும் சிந்தனைகளையும் ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாகவும் இருக்கின்றது. 


டிட்வா புயலுக்கு பிறகு மலையக மக்கள் காணி உரிமை தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகின்றது. அந்த வகையில்  சங்கு கலைக்கழகத்தின் நாடக ஆற்றுகையானது மலையகத்தில் ஒரு பாரிய மாற்றத்தினை கொண்டு வரும் எண்ணங்கள் எல்லோர் மத்தியிலும் விதைக்கப்பட்டதாக பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து கொண்டமையும் இங்கு ஒரு முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.


நிலைதுக்கான உரிமை எங்கே தேடுவோம் என்ற பாடல் முழு மலையகத்தின் விடுதலைக்கான அரை கூவலாக காணப்பட்டது.

சங்கு கலைக்கழகத்தின் நிலமே எங்கள் நிலைக்களம் வீதி நாடக ஆற்றுகை சங்கு கலைக்கழகத்தின் வீதி நாடக குழுவினர்களால் மலையக மக்களுடைய காணி உரிமை தொடர்பான ஆற்றுகை பன்மூர் தோட்டத்தில்  நேற்று ஆற்றுகை  செய்யப்பட்டது.இந்நாடக ஆற்றுகையை சங்கு கலைக்கழகம் மற்றும் சிட்ப்ஸ் நிறுவனம் இணைந்து தங்கள் மக்களுடைய நில உரிமை பிரச்சனைகளை  எண்ணக் குமுறல்களை  விழிப்புணர்வு செய்வதற்காக முன் நின்று பல வீதி பிரச்சாரங்களையும் முன்னெடுத்தனர்.மற்றும் 203 வருட கால மலையக மக்களுடைய வருகையும் வாழ்வையும் அவர்களுடைய எண்ணக் குமுறல்களையும் 30 நிமிட வீதி நாடக ஆற்றலுக்குள் ஆற்றுகை செய்தமையானது  பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக  பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். மேலும் எதிர்கால சந்ததியினர் அவர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அடிப்படையாக அவர்களுடைய காணி உரிமைகள் பற்றிய தெளிவுகளையும் சிந்தனைகளையும் ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாகவும் இருக்கின்றது. டிட்வா புயலுக்கு பிறகு மலையக மக்கள் காணி உரிமை தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகின்றது. அந்த வகையில்  சங்கு கலைக்கழகத்தின் நாடக ஆற்றுகையானது மலையகத்தில் ஒரு பாரிய மாற்றத்தினை கொண்டு வரும் எண்ணங்கள் எல்லோர் மத்தியிலும் விதைக்கப்பட்டதாக பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து கொண்டமையும் இங்கு ஒரு முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.நிலைதுக்கான உரிமை எங்கே தேடுவோம் என்ற பாடல் முழு மலையகத்தின் விடுதலைக்கான அரை கூவலாக காணப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement