• May 18 2024

பெரும் ஆபத்தில் பயணிகளின் உயிர்..! இ.போ.ச பேருந்து சாரதியின் மோசமான செயல்...! மக்கள் விசனம்...! samugammedia

Sharmi / Feb 19th 2024, 1:17 pm
image

Advertisement

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை இ.போ.ச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துநரும் இடைநடுவில் இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண், நேற்றையதினம் இ.போ.ச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் வற்புறுத்தினார். 

பின்னர் சாரதியும் நடத்துநரும் இணைந்து அந்த பெண்ணை இடையில் இறக்கி விட்டனர்.

நாட்டில் அண்மைக் காலமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில்  பேருந்தில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறே பயணம் செய்கின்றனர். 

இருப்பினும், பேருந்து சாரதிகள் அவற்றினை எல்லாம் பொருட்படுத்தாது தமது மேலதிக கொடுப்பனவுக்காகவும், அதிக வருமானத்தை பெறும் நோக்கிலும் செயற்பட்டு வருகின்றனர்.

நேற்றையதினம், குறித்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியானது மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெரும் ஆபத்தில் பயணிகளின் உயிர். இ.போ.ச பேருந்து சாரதியின் மோசமான செயல். மக்கள் விசனம். samugammedia திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை இ.போ.ச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துநரும் இடைநடுவில் இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண், நேற்றையதினம் இ.போ.ச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால், அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் வற்புறுத்தினார். பின்னர் சாரதியும் நடத்துநரும் இணைந்து அந்த பெண்ணை இடையில் இறக்கி விட்டனர்.நாட்டில் அண்மைக் காலமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில்  பேருந்தில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறே பயணம் செய்கின்றனர். இருப்பினும், பேருந்து சாரதிகள் அவற்றினை எல்லாம் பொருட்படுத்தாது தமது மேலதிக கொடுப்பனவுக்காகவும், அதிக வருமானத்தை பெறும் நோக்கிலும் செயற்பட்டு வருகின்றனர்.நேற்றையதினம், குறித்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியானது மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement