• Nov 17 2024

மன்னாரில் அவசர அவசரமாக அகற்றப்பட்ட பிரதான சோதனைச் சாவடி..!

Sharmi / Sep 17th 2024, 10:51 am
image

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் இன்றையதினம்(17) காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் வருகையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது

இருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு ஒரு வார காலத்தின் பின் மீண்டும்   சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இன்றையதினம்(17)  பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள நிலையில் பிரதான பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் அடையாளம் தெரியாத வகையில் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.


மன்னாரில் அவசர அவசரமாக அகற்றப்பட்ட பிரதான சோதனைச் சாவடி. மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் இன்றையதினம்(17) காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் வருகையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததுஇருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு ஒரு வார காலத்தின் பின் மீண்டும்   சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இன்றையதினம்(17)  பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள நிலையில் பிரதான பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் அடையாளம் தெரியாத வகையில் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement