மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள் மதகு உடைந்து விழுந்துள்ளதனால் வேத்துச்சேனைக் கிராம மக்கள் மிகுந்த அபாயத்துடனும், சிரமத்துடனும் அவ்வீதியால் பயணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (06) குறித்த பகுதிக்குச் சென்ற போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் உடைந்த வீழ்ந்துள்ள மதகை பார்வையிட்டுள்ளார்.
கடந்த டித்வா புயலினால் இவ்வீதி பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் இப்பகுதியில் மழை பெய்து வருகின்ற இந்நிலையில் இன்றையதினம் இதிலுள்ள மதகு முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது.
இவ்வீதியை புனரமைப்புச் செய்ய வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் முன்வைத்திருந்தேன்.தற்போது வீதி அபிவிருத்தித்திணைக்களத்துடன் இணைந்து நாமும் இதற்குரிய மதிப்பீட்டைச் செய்து கொண்டிருக்கின்றோம். எனினும் இவ்வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கு எந்த திணைக்களமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் மதிமேனன் தெரிவித்தார்.
உடைந்து வீழ்ந்த வேத்துச்சேனைக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி மதகு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள் மதகு உடைந்து விழுந்துள்ளதனால் வேத்துச்சேனைக் கிராம மக்கள் மிகுந்த அபாயத்துடனும், சிரமத்துடனும் அவ்வீதியால் பயணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இன்று (06) குறித்த பகுதிக்குச் சென்ற போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் உடைந்த வீழ்ந்துள்ள மதகை பார்வையிட்டுள்ளார்.கடந்த டித்வா புயலினால் இவ்வீதி பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இப்பகுதியில் மழை பெய்து வருகின்ற இந்நிலையில் இன்றையதினம் இதிலுள்ள மதகு முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது.இவ்வீதியை புனரமைப்புச் செய்ய வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் முன்வைத்திருந்தேன்.தற்போது வீதி அபிவிருத்தித்திணைக்களத்துடன் இணைந்து நாமும் இதற்குரிய மதிப்பீட்டைச் செய்து கொண்டிருக்கின்றோம். எனினும் இவ்வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கு எந்த திணைக்களமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் மதிமேனன் தெரிவித்தார்.