• Nov 21 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும்- சிறிநாத்

Sharmi / Oct 14th 2024, 3:18 pm
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும், நிவாரணம் கிடைக்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் இன்று(14)  மதத்தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பில் உள்ள முன்னாள் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்த வைத்தியர் இ.சிறிநாத் அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி,உப்போடையில் உள்ள இராமகிருஸ்ண மிசனுக்கு சென்ற வேட்பாளர் சுவாமி நீலதமானந்தா மகராஜ் அவர்களிடமும் ஆசி பெற்றார்.

இதன்போது தான் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் தமது நோக்கம் தொடர்பில் மதத்தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் சிறிநாத்,

எமது பயணத்தில் வன்முறைகள் அற்ற,ஊழல் அற்ற தமிழ் தேசியத்தினை பாதுகாத்து நிற்கின்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக நான் களமிறங்கியுள்ளேன்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.புதிய அரசாங்கம் கூட உறுதிமொழிகளை வழங்கியுள்ளபோதிலும் இதுவரை நிறைவேற்றவில்லை.இது தொடர்பில் ஆயருடன் கலந்துரையாடியிருந்தேன்.

எமது பயணத்தில் வன்முறைகள்,ஊழல்களுக்கு முற்றாக எதிராகயிருக்கும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்,நிவாரணம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு நீதிகோரிய போராட்டங்களை தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும் அதற்கு பக்கபலமாக தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்றார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும்- சிறிநாத் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும், நிவாரணம் கிடைக்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் இன்று(14)  மதத்தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.மட்டக்களப்பில் உள்ள முன்னாள் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்த வைத்தியர் இ.சிறிநாத் அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி,உப்போடையில் உள்ள இராமகிருஸ்ண மிசனுக்கு சென்ற வேட்பாளர் சுவாமி நீலதமானந்தா மகராஜ் அவர்களிடமும் ஆசி பெற்றார்.இதன்போது தான் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் தமது நோக்கம் தொடர்பில் மதத்தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் சிறிநாத்,எமது பயணத்தில் வன்முறைகள் அற்ற,ஊழல் அற்ற தமிழ் தேசியத்தினை பாதுகாத்து நிற்கின்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக நான் களமிறங்கியுள்ளேன்.கடந்த காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.புதிய அரசாங்கம் கூட உறுதிமொழிகளை வழங்கியுள்ளபோதிலும் இதுவரை நிறைவேற்றவில்லை.இது தொடர்பில் ஆயருடன் கலந்துரையாடியிருந்தேன்.எமது பயணத்தில் வன்முறைகள்,ஊழல்களுக்கு முற்றாக எதிராகயிருக்கும்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்,நிவாரணம் கிடைக்க வேண்டும்.இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.இவ்வாறான செயற்பாடுகளுக்கு நீதிகோரிய போராட்டங்களை தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும் அதற்கு பக்கபலமாக தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement