• Nov 22 2024

திருமலையில் பத்து வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் மருத்துவ நிலையம்...! மக்கள் விசனம்...! samugammedia

Sharmi / Jan 8th 2024, 10:54 am
image

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மஜீத் நகர் டீ சந்தியில் உள்ள மருத்துவ நிலையம் பல வருட காலமாக பாழடைந்த நிலையில் காணப்பட்டது.

குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா மட்டுமே இடம்பெற்ற நிலையில் இது வரை அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் ,குழந்தைகளுக்கான நிறை போசாக்கு தொடர்பிலான சிகிச்சைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்திற் கொண்டு குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக மீள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் குறித்த கட்டிடத்தை பார்வையிட்டதுடன் எதிர்வரும் வாரமளவில் மீள இயங்க செய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமலையில் பத்து வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் மருத்துவ நிலையம். மக்கள் விசனம். samugammedia திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மஜீத் நகர் டீ சந்தியில் உள்ள மருத்துவ நிலையம் பல வருட காலமாக பாழடைந்த நிலையில் காணப்பட்டது.குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா மட்டுமே இடம்பெற்ற நிலையில் இது வரை அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் ,குழந்தைகளுக்கான நிறை போசாக்கு தொடர்பிலான சிகிச்சைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை கருத்திற் கொண்டு குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக மீள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் குறித்த கட்டிடத்தை பார்வையிட்டதுடன் எதிர்வரும் வாரமளவில் மீள இயங்க செய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement