25 மில்லியன் டொலர் மதிப்புள்ள வைரம் திருட்டு போன எட்டு மணி நேரத்தில் குறித்த திருட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் டுபாய் நாட்டில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
சந்தேக நபர்கள் வைரத்தின் உரிமையாளர் ஒருவரை இனங்கண்டு, பணக்காரர் ஒருவர் வைரத்தை வாங்கவுள்ளார் எனத் தெரிவித்து வைரத்தை பேரம்பேசியுள்ளனர்.
வைர உரிமையாளர் நம்புவதற்கு சந்தேகநபர்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தனர், உயர்ரக ஹோட்டல்களில் சந்திப்புகளை முன்பதிவு செய்தனர்.
மேலும் வைரத்தை சரிபார்க்க ஒரு பிரபலமான வைர நிபுணரை கூட நியமித்தனர்.
அவர்களின் செயலால் உறுதியாக நம்பிய வணிகர் இறுதியில் வைரத்தை தனது பாதுகாப்பான கடையிலிருந்து வெளியே கொண்டு வர ஒப்புக்கொண்டார்.
பின்னர் கும்பல் அவரை "வாங்குபவரை" சந்திப்பதாக சாக்குப்போக்கில் ஒரு வில்லாவிற்கு வரவழைத்தது. வைரம் காட்டப்பட்டதும், வைரத்தை அசால்ட்டாக பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதனையடுத்து திருட்டு தொடர்பில் துபாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டையடுத்து சிறப்புப் பணிக்குழுவை அமைத்து சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு ஆசிய நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரம் மீட்கப்பட்டது.
இளஞ்சிவப்பு வைரம் ஃபேன்சி இன்டென்ஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது 21.25 காரட் எடை கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
25 மில்லியன் டொலர் மதிப்புள்ள வைரத்தை அசால்ட்டாக திருடிய நபர்கள் - 8 மணிநேரத்தில் கைது 25 மில்லியன் டொலர் மதிப்புள்ள வைரம் திருட்டு போன எட்டு மணி நேரத்தில் குறித்த திருட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் டுபாய் நாட்டில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், சந்தேக நபர்கள் வைரத்தின் உரிமையாளர் ஒருவரை இனங்கண்டு, பணக்காரர் ஒருவர் வைரத்தை வாங்கவுள்ளார் எனத் தெரிவித்து வைரத்தை பேரம்பேசியுள்ளனர். வைர உரிமையாளர் நம்புவதற்கு சந்தேகநபர்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தனர், உயர்ரக ஹோட்டல்களில் சந்திப்புகளை முன்பதிவு செய்தனர். மேலும் வைரத்தை சரிபார்க்க ஒரு பிரபலமான வைர நிபுணரை கூட நியமித்தனர். அவர்களின் செயலால் உறுதியாக நம்பிய வணிகர் இறுதியில் வைரத்தை தனது பாதுகாப்பான கடையிலிருந்து வெளியே கொண்டு வர ஒப்புக்கொண்டார்.பின்னர் கும்பல் அவரை "வாங்குபவரை" சந்திப்பதாக சாக்குப்போக்கில் ஒரு வில்லாவிற்கு வரவழைத்தது. வைரம் காட்டப்பட்டதும், வைரத்தை அசால்ட்டாக பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.அதனையடுத்து திருட்டு தொடர்பில் துபாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டையடுத்து சிறப்புப் பணிக்குழுவை அமைத்து சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு ஆசிய நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரம் மீட்கப்பட்டது.இளஞ்சிவப்பு வைரம் ஃபேன்சி இன்டென்ஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது 21.25 காரட் எடை கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.