• Nov 25 2024

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு எடுத்த நடவடிக்கை..!

Chithra / Mar 20th 2024, 9:18 am
image

   

பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார்.

போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரந்த வாய்ப்புகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியில் ஏற்படும் மாற்றம், எதிர்காலத்தில் பாடசாலை கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களை புதிய பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப தயார்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு எடுத்த நடவடிக்கை.    பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார்.போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரந்த வாய்ப்புகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.கல்வியில் ஏற்படும் மாற்றம், எதிர்காலத்தில் பாடசாலை கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களை புதிய பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப தயார்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement