• Mar 16 2026

மஹிந்த தலைமையில் நாளை தங்காலையில் ஒன்றுகூடவுள்ள மொட்டு அணியினர்...! முக்கிய நிகழ்வுக்கும் ஏற்பாடு...!

Ziya / Mar 29th 2024, 7:55 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மாநாடு நாளை(30) தங்காலை நகரில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு குறித்த மாநாடு இடம்பெறவுள்ள அதேவேளை பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்ததன் பின்னர்  நடைபெறவுள்ள முதலாவது மாநாடு இதுவாகும்.

அதேவேளை நாளை இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில் பசில் ராஜபக்ச கலந்துகொள்வாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மஹிந்த தலைமையில் நாளை தங்காலையில் ஒன்றுகூடவுள்ள மொட்டு அணியினர். முக்கிய நிகழ்வுக்கும் ஏற்பாடு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மாநாடு நாளை(30) தங்காலை நகரில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு குறித்த மாநாடு இடம்பெறவுள்ள அதேவேளை பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்ததன் பின்னர்  நடைபெறவுள்ள முதலாவது மாநாடு இதுவாகும்.அதேவேளை நாளை இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில் பசில் ராஜபக்ச கலந்துகொள்வாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement