தமிழ் சினிமாவில் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படத்தில் முக்கியமான படமாக அமைந்த படம் தான் சிறை.
இந்த படம் சிறைக் கைதியின் காதல் கதையையும், இஸ்லாமியர்கள் மீதான குற்றப் பார்வையையும் அழுத்தமாக பேசியுள்ளது.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இந்த திரைப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார். இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
சுமார் ரூ.6 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சிறை’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிறை படம் இதுவரை உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், கதை, நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகியவை ரசிகர்களை கவர்ந்ததால், படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக, முதல் வார வசூலிலேயே படம் தயாரிப்பு செலவை பல மடங்கு கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியால் படக்குழுவினரும், திரையுலகினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், வருங்கால நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘சிறை’ திரைப்படம் -எத்தனை கோடி வசூல் தெரியுமா தமிழ் சினிமாவில் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படத்தில் முக்கியமான படமாக அமைந்த படம் தான் சிறை. இந்த படம் சிறைக் கைதியின் காதல் கதையையும், இஸ்லாமியர்கள் மீதான குற்றப் பார்வையையும் அழுத்தமாக பேசியுள்ளது. சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இந்த திரைப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார். இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. சுமார் ரூ.6 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சிறை’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், சிறை படம் இதுவரை உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், கதை, நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகியவை ரசிகர்களை கவர்ந்ததால், படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக, முதல் வார வசூலிலேயே படம் தயாரிப்பு செலவை பல மடங்கு கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றியால் படக்குழுவினரும், திரையுலகினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வருங்கால நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.