• Feb 16 2026

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்!

dileesiya / Jan 22nd 2026, 3:03 pm
image

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா அவருடைய தாயாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். 


அவர் நடிகராகவும், அவருடைய மனைவி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞராகவும் காணப்படுகின்றார்.


இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, இன்று (ஜனவரி 22) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இசை உலகில் பெரும் பங்களிப்பு செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, இசை ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


அவரது இறுதி சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா அவருடைய தாயாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். அவர் நடிகராகவும், அவருடைய மனைவி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞராகவும் காணப்படுகின்றார்.இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, இன்று (ஜனவரி 22) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இசை உலகில் பெரும் பங்களிப்பு செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, இசை ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரது இறுதி சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement