• Nov 23 2024

வவுனியாவில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொலை..! எட்டு வருடங்களின் பின் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!

Chithra / Dec 15th 2023, 12:53 pm
image

 

வவுனியாவில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் இருந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக உள்ள ஏ9 வீதியில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை நடைபெற்ற உடன் முல்லைத்தீவு ஊடாக இந்தியாவுக்கு புறப்பட தயாராகவிருந்த நிலையில், எதிரி கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிரி தலைமறைவாகியுள்ளார்.

எதிரியின் முன்னாள் மனைவியை இறந்தவர் திருமணம் செய்து ஏழாம் நாள் எதிரியால் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூரிய வெட்டும், ஆயுதத்தால் ஏற்பட்ட வெட்டுக்காயமும் காரணமாக மரணம் சம்பவித்ததாக சட்ட வைத்திய அதிகாரிகள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

இந்த வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டத்தரணி திருமதி தர்சிகா திருக்குமாரநாதன் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளமையினால் தண்டனை தீர்ப்பை பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து எதிரியை குற்றவாளி என நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியாவில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொலை. எட்டு வருடங்களின் பின் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு.  வவுனியாவில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் இருந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக உள்ள ஏ9 வீதியில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை நடைபெற்ற உடன் முல்லைத்தீவு ஊடாக இந்தியாவுக்கு புறப்பட தயாராகவிருந்த நிலையில், எதிரி கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிரி தலைமறைவாகியுள்ளார்.எதிரியின் முன்னாள் மனைவியை இறந்தவர் திருமணம் செய்து ஏழாம் நாள் எதிரியால் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய வெட்டும், ஆயுதத்தால் ஏற்பட்ட வெட்டுக்காயமும் காரணமாக மரணம் சம்பவித்ததாக சட்ட வைத்திய அதிகாரிகள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.இந்த வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டத்தரணி திருமதி தர்சிகா திருக்குமாரநாதன் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளமையினால் தண்டனை தீர்ப்பை பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து எதிரியை குற்றவாளி என நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement