• Sep 14 2025

மஹிந்தவுக்கு அடுத்த சிக்கல் - லலித் வீரதுங்கவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யவுள்ள சிஐடி

Chithra / Sep 14th 2025, 10:41 am
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சுக்காக வரி இல்லாத அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்தொன்று, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அக்காலத்தில் ஜனாதிபதி செயலாளர் திணைக்களத்தில் பணியாற்றிய மேலதிக செயலாளரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.

மஹிந்தவுக்கு அடுத்த சிக்கல் - லலித் வீரதுங்கவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யவுள்ள சிஐடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சுக்காக வரி இல்லாத அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்தொன்று, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்காலத்தில் ஜனாதிபதி செயலாளர் திணைக்களத்தில் பணியாற்றிய மேலதிக செயலாளரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement