• May 09 2026

தாய், தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டை; தாங்க முடியாமல் உயிரை விட்ட மகள்

Chithra / Feb 5th 2026, 10:22 am
image

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


களனி - திப்பிட்டிகொடவைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.


தாய், தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டையைத் தாங்க முடியாமல் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் உயிரை மாய்த்துள்ளார்.


களனியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊடாக தெஹிவளை நோக்கி சென்று அங்கு ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.


பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நேற்று களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜெயசிங்க முன்னிலையில் நடைபெற்றது.


இளம் பெண் எழுதிய கடிதம் களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பாக மேலததிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

தாய், தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டை; தாங்க முடியாமல் உயிரை விட்ட மகள் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி - திப்பிட்டிகொடவைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.தாய், தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டையைத் தாங்க முடியாமல் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் உயிரை மாய்த்துள்ளார்.களனியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊடாக தெஹிவளை நோக்கி சென்று அங்கு ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நேற்று களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜெயசிங்க முன்னிலையில் நடைபெற்றது.இளம் பெண் எழுதிய கடிதம் களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலததிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement