• Sep 29 2024

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியும் ஜேவிபியுமே காரணம்..! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு samugammedia

Chithra / Nov 20th 2023, 8:42 am
image

Advertisement

 

தமது கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் இலங்கையின் பொருளாாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டுமென  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.       

ஜனாதிபதி தேர்தலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியை எதிர்நோக்கிய போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக பதிவாகியிருந்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும், 2020 ஆம் ஆண்டளவில் அது 2 வீதத்துக்கு குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பொறுப்பு கூற வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில, கடந்த 2019 ஆம் ஆண்டு சிறிலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்ச தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப வரிகளை குறைத்திருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

மக்கள் ஆணை மூலம் தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணமென கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், எதிர்க்கட்சியினர் எதன் அடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சி காலத்தை தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிக்கிறாரர்கள் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியும் ஜேவிபியுமே காரணம். நாமல் பகிரங்க குற்றச்சாட்டு samugammedia  தமது கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் இலங்கையின் பொருளாாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டுமென  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.       ஜனாதிபதி தேர்தலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியை எதிர்நோக்கிய போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக பதிவாகியிருந்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், 2020 ஆம் ஆண்டளவில் அது 2 வீதத்துக்கு குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பொறுப்பு கூற வேண்டுமென அவர் கூறியுள்ளார். இந்த நிலையில, கடந்த 2019 ஆம் ஆண்டு சிறிலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்ச தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப வரிகளை குறைத்திருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் ஆணை மூலம் தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணமென கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்க்கட்சியினர் எதன் அடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சி காலத்தை தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிக்கிறாரர்கள் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement