• May 01 2024

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் பாராளுமன்ற தெரிவுக்குழு தலையிடாது..! அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு samugammedia

Chithra / Oct 18th 2023, 9:06 am
image

Advertisement


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தமை அதன் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதன் நோக்கம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கும் போதே,  இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் ஆவணங்களை முன்வைக்க முடியும் என நினைக்கின்றேன்.

ஏனெனில் அந்த விவாதத்தில் சில எம்.பி.க்கள் புதிய விஷயங்களை முன்வைத்த காலங்கள் உண்டு, நமக்குத் தெரியாத விஷயங்கள், ஒருவேளை அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எமது அனைவரினதும் நிலைப்பாடு.

இதனை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அந்தச் சோதனைகளுக்கு இது ஒரு தடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை என்றார். 

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் பாராளுமன்ற தெரிவுக்குழு தலையிடாது. அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு samugammedia ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தமை அதன் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதன் நோக்கம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கும் போதே,  இதனைத் தெரிவித்தார்.பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் ஆவணங்களை முன்வைக்க முடியும் என நினைக்கின்றேன்.ஏனெனில் அந்த விவாதத்தில் சில எம்.பி.க்கள் புதிய விஷயங்களை முன்வைத்த காலங்கள் உண்டு, நமக்குத் தெரியாத விஷயங்கள், ஒருவேளை அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எமது அனைவரினதும் நிலைப்பாடு.இதனை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அந்தச் சோதனைகளுக்கு இது ஒரு தடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை என்றார். 

Advertisement

Advertisement

Advertisement