ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைப்பற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை தோற்கடிக்க இன்றைய மே தினத்தை தீர்க்கமான நாளாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன தலைவர்கள் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் மே தினப் பிரச்சாரத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவும், மே தினக் கூட்டங்களில் அதிகபட்சமான கட்சி உறுப்பினர்களை பங்கேற்கச் செய்யவும் இரண்டு அடிப்படை கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி தலைவர்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாமரை மொட்டு அலங்காரத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேவையான சகல பணமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியினரை மே பேரணியில் பங்கேற்க வைப்பதற்கு தேவையான பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் மே தினப் பிரச்சாரங்கள் - ரணிலை தோற்கடிக்க பசில் செய்துள்ள சூழ்ச்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைப்பற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை தோற்கடிக்க இன்றைய மே தினத்தை தீர்க்கமான நாளாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன தலைவர்கள் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனால் ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் மே தினப் பிரச்சாரத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவும், மே தினக் கூட்டங்களில் அதிகபட்சமான கட்சி உறுப்பினர்களை பங்கேற்கச் செய்யவும் இரண்டு அடிப்படை கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி தலைவர்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாமரை மொட்டு அலங்காரத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேவையான சகல பணமும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் கட்சியினரை மே பேரணியில் பங்கேற்க வைப்பதற்கு தேவையான பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.