ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வெளியே ஓர் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தால், பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டமொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
எதிர்கால அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொட்டுக் கட்சிக்கு பிரதமர் பதவி வேண்டும் டீல் பேசிய நாமல் ராஜபக்ச ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வெளியே ஓர் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தால், பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டமொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.எதிர்கால அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, பெசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.