• Aug 15 2025

அரசுக்கு சவாலாக மாறியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு!

Chithra / Aug 15th 2025, 9:15 am
image

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்டத் தொழில்கள் அமைச்சகமும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அரசுக்கு சவாலாக மாறியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்டத் தொழில்கள் அமைச்சகமும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் கூறினார்.மேலும், எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement