• May 21 2024

ஆபத்தில் இலங்கை மக்கள்..! அதிகரிக்கும் உயிரிழப்புகள்..! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Chithra / Jan 17th 2024, 9:08 am
image

Advertisement

 

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் நடுத்தர வயதுடையவர்களிடமே இந்த நிலைமையை அதிகம் இனங்காண முடியும்.

இலங்கையில் கொரோனா அனர்த்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்ற சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் இந்த நிலைக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகளை வெளிப்படுத்தாததால் அமைதியான மரணம் ஏற்படுகிறது என வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மோசமாகும்போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், மக்களிடையே உள்ள உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் மரணம் வரை கண்டறியப்படாமல் போகும், ஏனெனில் அது அறிகுறிகளைக் காட்டாது. 

இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நிலைகள் அவற்றில் முக்கியமானவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தில் இலங்கை மக்கள். அதிகரிக்கும் உயிரிழப்புகள். வைத்திய நிபுணர் எச்சரிக்கை  இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.தெற்காசிய நாடுகளின் நடுத்தர வயதுடையவர்களிடமே இந்த நிலைமையை அதிகம் இனங்காண முடியும்.இலங்கையில் கொரோனா அனர்த்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்ற சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் இந்த நிலைக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகளை வெளிப்படுத்தாததால் அமைதியான மரணம் ஏற்படுகிறது என வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைமை மோசமாகும்போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், மக்களிடையே உள்ள உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் மரணம் வரை கண்டறியப்படாமல் போகும், ஏனெனில் அது அறிகுறிகளைக் காட்டாது. இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நிலைகள் அவற்றில் முக்கியமானவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement