நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக அதிகரித்த மழைவீழ்ச்சியால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் யாழ். தென்மராட்சி கிழக்கு கொடிகாமம் பகுதியிலும் வெள்ளநீர் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது கொடிகாமம் மத்தி, கொடிகாமம் தெற்கு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை வரை யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேரும், யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேரும், யா/போக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும், யா/போக்கட்டி அ.த.க பாடசாலையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் கச்சாய், மகாவித்தியாலயத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மழை வீழ்ச்சி அதிகரித்தால் இன்னும் அதிகமானோர் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ள அனர்த்ததினால் கொடிகாம மக்களின் நிலை நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக அதிகரித்த மழைவீழ்ச்சியால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் யாழ். தென்மராட்சி கிழக்கு கொடிகாமம் பகுதியிலும் வெள்ளநீர் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதாவது கொடிகாமம் மத்தி, கொடிகாமம் தெற்கு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று மாலை வரை யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேரும், யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேரும், யா/போக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும், யா/போக்கட்டி அ.த.க பாடசாலையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் கச்சாய், மகாவித்தியாலயத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் மழை வீழ்ச்சி அதிகரித்தால் இன்னும் அதிகமானோர் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.