• Oct 07 2024

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு உள் மற்றும் வெளிப்புற காரணிகளே காரணம்! - இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு

Chithra / Oct 6th 2024, 1:27 pm
image

Advertisement

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த அரசியல் அதிர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் விளைவு என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஏற்பாடு செய்த கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள் உலகின் பிற பிராந்தியங்களில், குறிப்பாக தெற்கில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையிலும் இந்த காரணிகளின் விளைவாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் இடம்பெறும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பதற்றநிலை தோற்றம் பெற்றதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு உள் மற்றும் வெளிப்புற காரணிகளே காரணம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு  இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த அரசியல் அதிர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் விளைவு என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஏற்பாடு செய்த கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள் உலகின் பிற பிராந்தியங்களில், குறிப்பாக தெற்கில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில் இலங்கையிலும் இந்த காரணிகளின் விளைவாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் இடம்பெறும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பதற்றநிலை தோற்றம் பெற்றதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement