• Nov 28 2024

தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது; கட்சி ஒன்றும் றோட்டில் விற்கும் அப்பம் இல்லை- சிவமோகன் காட்டம்..!

Sharmi / Oct 12th 2024, 4:30 pm
image

கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்த பதவி நாசமாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் என்றும் தெரிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஒரு ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது. எமது கட்சியின் தேர்தல் நியமனக்குழுவானது கடந்த 2018இல் தேர்வுசெய்யப்பட்டது.

அதில் சட்டத்தரணி தவராசா, சாள்ஸ்நிர்மலநாதன், ஈ.சரவணபவன், நான் உட்பட நான்குபேர் அந்த குழுவில் இருந்தோம்.

இந்தநிலையில் திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்குபேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன், சேயோன்,  ரஞ்சினி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்ப்பட்டது. 

டம்மி விளையாட்டே இது

தான்மட்டும் வன்னியில் வெல்லவேண்டும் என்ற டம்மி விளையாட்டே இது.எனவே பதில் பொதுச்செயலாளருக்கு நான் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவுள்ளேன். இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளை செய்வார்கள். இவர்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை வேட்பாளராக போடுவதில்லை என்று கட்சி ஒருபோதும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் பொதுக்குழுவிலும், மத்தியகுழுவிலும் இல்லை. கட்சியை வெட்டிவிட்டு ஒருசிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல். எப்படி இந்த சதிவேலையினை திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள்.

மாவை ராஜினாமா

தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்யமுடியவில்லை என்பதாலும். நியமனக்குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலுமே மாவை சேனாதிராஜா பதவி விலகினார். நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சொன்னால்.. தமிழரசுக் கட்சி அதுவல்லவே. இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது. 

ஒருவரை தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள் இவர்களால் எப்படி வெல்லமுடியும். 

செயலாளர் பதவி தரம்தாழ்ந்தது.

இன்று வன்னியில்புதிதாக போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர்.  அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர்.  

வேட்பாளராக என்னை தெரிவு செய்யுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை.எனக்கு பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே நான் பரிந்துரை செய்தேன்.

கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்ப்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியினை இன்று கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக் குடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப் பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக்குடுத்து செயற்ப்பட்டிருந்தனர் .

ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது. 

தேசியபட்டியல் வழங்க விடோம்

தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகிறோம் என்று அழைக்கிறார்கள். இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை. உங்களுக்குள்ளேயே பிரித்துக்கொள்ளவா இந்தக்குழுவை போட்டோம். தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். அது நடக்கவில்லை.

ஆனால் தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாவிட்டால் அதனைமட்டும் எப்படி கொடுக்கமுடியும். யாழ்ப்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியபட்டியலாம் என்று அங்கு ஒருவர். இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார்.

கட்சி என்ன றோட்டில விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக்கொண்டு போறதுக்கு.பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கே தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவேண்டும்.

மாகாணசபையில் ஊழல் செய்தார்

ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தார்.  இவர்கள் தெரிவு செய்தவர்கள் ஊழல் மோசடிக்காறர்கள் இல்லயா.  மாகாணசபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர். பின்னர் நீதிமன்றிற்கு சென்று தாங்கள் நியாயவாதிகள் என்று இன்றுவரை நியாயப்படுத்தமுடியாதவர். இவர்கள் தான் ஊழல்வாதிகள். முல்லைமாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள். ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர். இரட்டை பிரயா உரிமைகொண்டவர் பாராளுமன்றுக்கு செல்லமுடியுமா. அடுத்தவர் புலிகள் காலத்தில் ஊழல் மோசடிக்காக அடைத்துவைக்கப்பட்டவர். இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல் மோசடியில் சிக்கியவர். இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள். நல்லதே நடக்கட்டும். நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையினை தனித்தனியாக தாக்கல்செய்வேன். 

செயலாளரால் நீதிமன்றுக்கு சென்றகட்சி

இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்கமுடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது. எதனால் அது?கட்சியின் மாநாடுநடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்படவேண்டும். அந்த கூட்டத்தில் தான் பிரச்சனைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது. பதவிகளில் யாரைபோடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்த கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக்குழுவின் பணி. அந்தக்கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமையில் நடப்பதாக இருந்தது. நாங்க அதற்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்தக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கிறார் என்றார்கள். அதனால் கூட்டம் ரத்தாகியது. அந்த பதில்செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களை தரவேண்டும் ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது நீங்கள்  போய் அவரிடம் கேட்டுபாருங்கள். மக்களுக்கு அதனை வெளிப்படுத்தவேண்டும். அப்படி இல்லாது விடில் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி அந்த சூழ்ச்சியினாலேயே அந்த தெரிவுகள் போட்டிக்கு சென்றது. பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது.

செயலாளரும்,பேச்சாளரும் விலகினால்தான் விடிவு.

எனவே பதில்செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியினை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்யவேண்டும். அடுத்தது ஊடகப்பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்லவேணும்.  தனிப்பட்ட கருத்தை அவர் சொல்லமுடியாது. ஊடக பேச்சாளர் அந்த தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்படவேண்டும். நாம் பயந்தவர்கள் அல்ல கடசிவரை தமிழரசுக்கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம் உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியோடுதான் பயணிப்பேன் என்றார்


தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது; கட்சி ஒன்றும் றோட்டில் விற்கும் அப்பம் இல்லை- சிவமோகன் காட்டம். கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்த பதவி நாசமாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஒரு ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது. எமது கட்சியின் தேர்தல் நியமனக்குழுவானது கடந்த 2018இல் தேர்வுசெய்யப்பட்டது. அதில் சட்டத்தரணி தவராசா, சாள்ஸ்நிர்மலநாதன், ஈ.சரவணபவன், நான் உட்பட நான்குபேர் அந்த குழுவில் இருந்தோம். இந்தநிலையில் திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்குபேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன், சேயோன்,  ரஞ்சினி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்ப்பட்டது. டம்மி விளையாட்டே இதுதான்மட்டும் வன்னியில் வெல்லவேண்டும் என்ற டம்மி விளையாட்டே இது.எனவே பதில் பொதுச்செயலாளருக்கு நான் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவுள்ளேன். இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளை செய்வார்கள். இவர்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை வேட்பாளராக போடுவதில்லை என்று கட்சி ஒருபோதும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் பொதுக்குழுவிலும், மத்தியகுழுவிலும் இல்லை. கட்சியை வெட்டிவிட்டு ஒருசிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல். எப்படி இந்த சதிவேலையினை திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள்.மாவை ராஜினாமாதலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்யமுடியவில்லை என்பதாலும். நியமனக்குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலுமே மாவை சேனாதிராஜா பதவி விலகினார். நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சொன்னால். தமிழரசுக் கட்சி அதுவல்லவே. இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது. ஒருவரை தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள் இவர்களால் எப்படி வெல்லமுடியும். செயலாளர் பதவி தரம்தாழ்ந்தது.இன்று வன்னியில்புதிதாக போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர்.  அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர்.  வேட்பாளராக என்னை தெரிவு செய்யுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை.எனக்கு பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே நான் பரிந்துரை செய்தேன்.கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்ப்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியினை இன்று கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக் குடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப் பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக்குடுத்து செயற்ப்பட்டிருந்தனர் .ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது. தேசியபட்டியல் வழங்க விடோம்தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகிறோம் என்று அழைக்கிறார்கள். இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை. உங்களுக்குள்ளேயே பிரித்துக்கொள்ளவா இந்தக்குழுவை போட்டோம். தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். அது நடக்கவில்லை. ஆனால் தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாவிட்டால் அதனைமட்டும் எப்படி கொடுக்கமுடியும். யாழ்ப்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியபட்டியலாம் என்று அங்கு ஒருவர். இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார். கட்சி என்ன றோட்டில விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக்கொண்டு போறதுக்கு.பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கே தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவேண்டும்.மாகாணசபையில் ஊழல் செய்தார்ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தார்.  இவர்கள் தெரிவு செய்தவர்கள் ஊழல் மோசடிக்காறர்கள் இல்லயா.  மாகாணசபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர். பின்னர் நீதிமன்றிற்கு சென்று தாங்கள் நியாயவாதிகள் என்று இன்றுவரை நியாயப்படுத்தமுடியாதவர். இவர்கள் தான் ஊழல்வாதிகள். முல்லைமாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள். ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர். இரட்டை பிரயா உரிமைகொண்டவர் பாராளுமன்றுக்கு செல்லமுடியுமா. அடுத்தவர் புலிகள் காலத்தில் ஊழல் மோசடிக்காக அடைத்துவைக்கப்பட்டவர். இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல் மோசடியில் சிக்கியவர். இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள். நல்லதே நடக்கட்டும். நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையினை தனித்தனியாக தாக்கல்செய்வேன். செயலாளரால் நீதிமன்றுக்கு சென்றகட்சிஇன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்கமுடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது. எதனால் அதுகட்சியின் மாநாடுநடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்படவேண்டும். அந்த கூட்டத்தில் தான் பிரச்சனைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது. பதவிகளில் யாரைபோடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்த கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக்குழுவின் பணி. அந்தக்கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமையில் நடப்பதாக இருந்தது. நாங்க அதற்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்தக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கிறார் என்றார்கள். அதனால் கூட்டம் ரத்தாகியது. அந்த பதில்செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களை தரவேண்டும் ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது நீங்கள்  போய் அவரிடம் கேட்டுபாருங்கள். மக்களுக்கு அதனை வெளிப்படுத்தவேண்டும். அப்படி இல்லாது விடில் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி அந்த சூழ்ச்சியினாலேயே அந்த தெரிவுகள் போட்டிக்கு சென்றது. பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது.செயலாளரும்,பேச்சாளரும் விலகினால்தான் விடிவு.எனவே பதில்செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியினை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்யவேண்டும். அடுத்தது ஊடகப்பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்லவேணும்.  தனிப்பட்ட கருத்தை அவர் சொல்லமுடியாது. ஊடக பேச்சாளர் அந்த தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்படவேண்டும். நாம் பயந்தவர்கள் அல்ல கடசிவரை தமிழரசுக்கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம் உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியோடுதான் பயணிப்பேன் என்றார்

Advertisement

Advertisement

Advertisement