• Aug 23 2025

6ஆவது நாளாக தொடரும் தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு

Chithra / Aug 23rd 2025, 8:43 am
image

 

2025 ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று தபால்தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, இன்று (23) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. 

19 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பின் விளைவாக, மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் தேங்கியுள்ள ஏராளமான பொதிகள், பொலிஸாருடன் உதவியுடன் இலங்கை இராணுவத்தால் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அஞ்சல் பரிமாற்ற வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்தப் பொதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.


6ஆவது நாளாக தொடரும் தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு  2025 ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று தபால்தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, இன்று (23) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. 19 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பின் விளைவாக, மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் தேங்கியுள்ள ஏராளமான பொதிகள், பொலிஸாருடன் உதவியுடன் இலங்கை இராணுவத்தால் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளன. மத்திய அஞ்சல் பரிமாற்ற வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்தப் பொதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement