• Sep 20 2024

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைதொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன் வரவேண்டும். - எம் தௌபீக் எம்.பி கோரிக்கை! samugammedia

Tamil nila / May 11th 2023, 9:11 pm
image

Advertisement

எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் அந்த பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் வேண்டும் என வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 25, 30 வருடமாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் நிரந்தர தீர்வை பெற வேண்டும் என்ற நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவேண்டும்

கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டது போல முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய காணிகள், உடைமைகளை இழந்திருக்கிறோம் என்பதையும் நியாபகப்படுத்திக்கொள்கிறேன்.

தற்போது நாங்கள் ஒரு சில சிறிய சலுகைகளை பெறுவதற்குகூட போராட வேண்டிய நிலை காணப்படுகிறது. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளுடனும் தலைவர்களுடனும் பேசி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைதொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன் வரவேண்டும். - எம் தௌபீக் எம்.பி கோரிக்கை samugammedia எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் அந்த பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் வேண்டும் என வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் கோரிக்கை விடுத்தார்.மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 25, 30 வருடமாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் நிரந்தர தீர்வை பெற வேண்டும் என்ற நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவேண்டும்கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டது போல முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய காணிகள், உடைமைகளை இழந்திருக்கிறோம் என்பதையும் நியாபகப்படுத்திக்கொள்கிறேன்.தற்போது நாங்கள் ஒரு சில சிறிய சலுகைகளை பெறுவதற்குகூட போராட வேண்டிய நிலை காணப்படுகிறது. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளுடனும் தலைவர்களுடனும் பேசி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement