ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டே கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார். பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பிலும் நெருக்கடி நிலைமையே நிலவுகிறது. இதற்கு விரைவான தீர்வு கிடைக்காவிட்டால் வேறு யாராவது நபரின் தலையீட்டினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பெரும் இடையூறு ஏற்படுமென்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மிக அவசரமாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இந்நிலையில், தான் வேட்பாளர் என்பதால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது பொருத்தமற்றது என்று அவரால் கூற முடியும்.
எனவே, இந்த விடயத்தில் நெருக்கடிநிலை உருவாகியுள்ளது.
சட்டத்துறை, நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை என்பன இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் ஏதோவொரு தரப்பினரின் அச்சுறுத்தலுக்கமைய, இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பெரும் இடையூறு ஏற்படலாம் விமல் வீரவங்ச ஆரூடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டே கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார். பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பிலும் நெருக்கடி நிலைமையே நிலவுகிறது. இதற்கு விரைவான தீர்வு கிடைக்காவிட்டால் வேறு யாராவது நபரின் தலையீட்டினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பெரும் இடையூறு ஏற்படுமென்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,ஜனாதிபதி மிக அவசரமாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இந்நிலையில், தான் வேட்பாளர் என்பதால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது பொருத்தமற்றது என்று அவரால் கூற முடியும்.எனவே, இந்த விடயத்தில் நெருக்கடிநிலை உருவாகியுள்ளது.சட்டத்துறை, நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை என்பன இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் ஏதோவொரு தரப்பினரின் அச்சுறுத்தலுக்கமைய, இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.