• Sep 18 2026

மாகாணசபைத் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்த முடியும்! – தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Sep 18th 2026, 10:52 am
image


மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் சட்டச் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டால், மூன்று மாத காலத்துக்குள் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் விதப்புரை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம் டிசம்பர் 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


குறித்த செயற்குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையாகி, மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை தொடர்ந்து நீட்டிப்பது, தேர்தலை விரைவாக நடத்தும் எதிர்பார்ப்புக்கு தடையாக அமையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, செயற்குழுவின் விதப்புரை அறிக்கையை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.


மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பதை பாராளுமன்றம் தீர்மானித்து, அதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றினால், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மாகாணசபைத் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் சட்டச் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டால், மூன்று மாத காலத்துக்குள் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் விதப்புரை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம் டிசம்பர் 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.குறித்த செயற்குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையாகி, மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை தொடர்ந்து நீட்டிப்பது, தேர்தலை விரைவாக நடத்தும் எதிர்பார்ப்புக்கு தடையாக அமையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, செயற்குழுவின் விதப்புரை அறிக்கையை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பதை பாராளுமன்றம் தீர்மானித்து, அதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றினால், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement