• Nov 05 2024

டெலிபோன் அணிக்குள் நிகழும் விருப்புவாக்குப் போட்டி: தமிழ் வாக்காளர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் - மனோ கணேசன்

Tharmini / Nov 5th 2024, 4:04 pm
image

Advertisement

"இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம்,  இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது.

அதற்குப் பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளைத் தேடி அலைகின்றார்கள்.

தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே தாம் இழந்த சிங்கள வாக்குகளை ஈடுசெய்ய, தமிழ் விருப்பு வாக்குகளைப் பெற்று கரையேற தவியாய் தவிக்கின்றார்கள்.

இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்தப் பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாகப் போட்டியிடும் எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகின்றேன்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-  

"கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எமது வேட்பாளராக இருந்து சஜித் பிரேமதாஸவுக்கு கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் வெற்றி வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். நுவரெலியா மாவட்டத்தை வென்று கொடுத்தோம். இவை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சாதனை வெற்றிகள்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைச் சஜித் பிரேமதாஸவுக்குப் பெற முடியாத பல பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், இன்று டெலிபோன் சின்ன வேட்பாளர்களாக, தமிழ் விருப்பு வாக்குகளைத் தேடி ஓடி வருகின்றார்கள். தமிழ் வாக்களர்கள் முன் தோன்றி, தமிழ் மக்கள் மீது திடீர் பாசம் கொண்டு பேசுகின்றார்கள். தமிழ் வாக்காளர்களைக் கண்டு பேசி கட்டி அணைக்க முயல்கின்றார்கள். எப்படியாவது கொஞ்சம் தமிழ் விருப்பு வாக்குகளை வாங்கி கரையேற முயல்கின்றார்கள். இது என்ன வகையில் நியாயம்?

தமிழ் மக்கள் துன்பப்படும்போது, துயரப்படும்போது, கண்ணீர் விடும்போது, சிக்கல்களில் சிக்கி தவிக்கும்போது, அது எமக்கு வலித்தது. தொடர்ந்தும் வலிக்கும். நாம்தாம் அங்கே இருந்தோம். நான்தான் எப்போதும் அங்கே இருந்தேன். இன்று தமிழ் விருப்பு வாக்குகளைத் தேடி வரும் எவரும் அங்கே இருக்கவில்லை.

நாளை அடுத்த நாடாளுமன்றத்தில், அநுர நிர்வாகத்துடன் தமிழ் மக்கள் சார்பாகக் கலந்துரையாடப் போவது தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  தலைவர்களும், எம்பிக்களும்தான். தமிழ்க் கட்சிகள்தான். வேறு எவரும் கிடையாது. வேறு எவருக்கும் எம் மீது அக்கறை கிடையாது. இதைத் தமிழ் மக்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்  வாக்காளர்கள் மீது திடீர் பாசம் காட்டும் இந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களுக்குத் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளைத் தவறி போயும் கொடுத்து விட்டால், களத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி அடைய முடியாமல் போய் விடும். எமக்குப்  பெரிய அளவில் சிங்கள வாக்குகள் கிடைக்கப் போவதில்லை.

ஆனால், எமது விருப்பு வாக்குகளையும் வாங்கி, அதனுடன் கொஞ்சம் சிங்கள விருப்பு வாக்குகளையும் வாங்கிச் சேர்த்து, இவர்கள் விருப்பு வாக்குப்  பட்டியல் வரிசையில் மேலே போய் விடுவார்கள். தமிழ் வாக்குகளை மாத்திரம் பெறுகின்ற நாம், கடைசியில் தெரிவு செய்யப்படும் எம்.பிக்களைத் தீர்மானிக்கும் விருப்பு வாக்குப் பட்டியல் வரிசையில் பின்தங்கி விடுவோம். ஆகவே, இது எமது விரல்களால், எமது கண்களையே குத்திக் கொள்வதாகும்.  

ஆகவே, இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்தப் பட்டியலில் புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாகப் போட்டியிடும் எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்குத்தான் தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும்." - என்றுள்ளது

டெலிபோன் அணிக்குள் நிகழும் விருப்புவாக்குப் போட்டி: தமிழ் வாக்காளர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் - மனோ கணேசன் "இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம்,  இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்குப் பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளைத் தேடி அலைகின்றார்கள். தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே தாம் இழந்த சிங்கள வாக்குகளை ஈடுசெய்ய, தமிழ் விருப்பு வாக்குகளைப் பெற்று கரையேற தவியாய் தவிக்கின்றார்கள். இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்தப் பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாகப் போட்டியிடும் எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகின்றேன்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-  "கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எமது வேட்பாளராக இருந்து சஜித் பிரேமதாஸவுக்கு கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் வெற்றி வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். நுவரெலியா மாவட்டத்தை வென்று கொடுத்தோம். இவை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சாதனை வெற்றிகள்.ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைச் சஜித் பிரேமதாஸவுக்குப் பெற முடியாத பல பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், இன்று டெலிபோன் சின்ன வேட்பாளர்களாக, தமிழ் விருப்பு வாக்குகளைத் தேடி ஓடி வருகின்றார்கள். தமிழ் வாக்களர்கள் முன் தோன்றி, தமிழ் மக்கள் மீது திடீர் பாசம் கொண்டு பேசுகின்றார்கள். தமிழ் வாக்காளர்களைக் கண்டு பேசி கட்டி அணைக்க முயல்கின்றார்கள். எப்படியாவது கொஞ்சம் தமிழ் விருப்பு வாக்குகளை வாங்கி கரையேற முயல்கின்றார்கள். இது என்ன வகையில் நியாயம்தமிழ் மக்கள் துன்பப்படும்போது, துயரப்படும்போது, கண்ணீர் விடும்போது, சிக்கல்களில் சிக்கி தவிக்கும்போது, அது எமக்கு வலித்தது. தொடர்ந்தும் வலிக்கும். நாம்தாம் அங்கே இருந்தோம். நான்தான் எப்போதும் அங்கே இருந்தேன். இன்று தமிழ் விருப்பு வாக்குகளைத் தேடி வரும் எவரும் அங்கே இருக்கவில்லை.நாளை அடுத்த நாடாளுமன்றத்தில், அநுர நிர்வாகத்துடன் தமிழ் மக்கள் சார்பாகக் கலந்துரையாடப் போவது தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  தலைவர்களும், எம்பிக்களும்தான். தமிழ்க் கட்சிகள்தான். வேறு எவரும் கிடையாது. வேறு எவருக்கும் எம் மீது அக்கறை கிடையாது. இதைத் தமிழ் மக்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழ்  வாக்காளர்கள் மீது திடீர் பாசம் காட்டும் இந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களுக்குத் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளைத் தவறி போயும் கொடுத்து விட்டால், களத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி அடைய முடியாமல் போய் விடும். எமக்குப்  பெரிய அளவில் சிங்கள வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. ஆனால், எமது விருப்பு வாக்குகளையும் வாங்கி, அதனுடன் கொஞ்சம் சிங்கள விருப்பு வாக்குகளையும் வாங்கிச் சேர்த்து, இவர்கள் விருப்பு வாக்குப்  பட்டியல் வரிசையில் மேலே போய் விடுவார்கள். தமிழ் வாக்குகளை மாத்திரம் பெறுகின்ற நாம், கடைசியில் தெரிவு செய்யப்படும் எம்.பிக்களைத் தீர்மானிக்கும் விருப்பு வாக்குப் பட்டியல் வரிசையில் பின்தங்கி விடுவோம். ஆகவே, இது எமது விரல்களால், எமது கண்களையே குத்திக் கொள்வதாகும்.  ஆகவே, இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்தப் பட்டியலில் புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாகப் போட்டியிடும் எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்குத்தான் தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும்." - என்றுள்ளது

Advertisement

Advertisement

Advertisement