• May 19 2025

சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர் போராட்டம்! கொழும்பில் பதற்றம்

Chithra / May 18th 2025, 3:02 pm
image

மருதானை தொடருந்து  நிலையம் அருகே உள்ள தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற கட்டுப்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக மருதானை தொடருந்து நிலைய வளாகத்தில் பொலிசாரும், தொடருந்து ஊழியர்களும் திரண்டுள்ளனர்.

அத்துடன் பொதுமக்கள் ஏராளமானோரும் அவ்விடத்துக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதால் தொடருந்து நிலையம் பரபரப்பாக மாறியுள்ளது.

சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர் போராட்டம் கொழும்பில் பதற்றம் மருதானை தொடருந்து  நிலையம் அருகே உள்ள தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற கட்டுப்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.இதன் காரணமாக மருதானை தொடருந்து நிலைய வளாகத்தில் பொலிசாரும், தொடருந்து ஊழியர்களும் திரண்டுள்ளனர்.அத்துடன் பொதுமக்கள் ஏராளமானோரும் அவ்விடத்துக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதால் தொடருந்து நிலையம் பரபரப்பாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement