• Jan 26 2025

நாட்டை சீன கடன்பொறிக்குள் ராஜபக்ஷக்கள் தள்ளவில்லை; அநுரவின் விஜயம் நிரூபித்துள்ளது! சாகர கருத்து

Chithra / Jan 19th 2025, 8:07 am
image

 

ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம், ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக அவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தினை பொய்யென வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டினார்கள்.   

ஆனால் இன்று பொருளாதார மீட்சிக்கு சீனாவை தஞ்சமடைந்துள்ளார்கள். 

தேசிய மக்கள் விடுதலை முன்னணி பொய்யை மாத்திரம் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயம் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நாட்டு மக்களுக்கு பல உண்மைகளை உணர்த்தியுள்ளது.   

சீனா தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்து பொய் என்பது  திட்டவட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

இதேவேளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


நாட்டை சீன கடன்பொறிக்குள் ராஜபக்ஷக்கள் தள்ளவில்லை; அநுரவின் விஜயம் நிரூபித்துள்ளது சாகர கருத்து  ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம், ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக அவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தினை பொய்யென வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டினார்கள்.   ஆனால் இன்று பொருளாதார மீட்சிக்கு சீனாவை தஞ்சமடைந்துள்ளார்கள். தேசிய மக்கள் விடுதலை முன்னணி பொய்யை மாத்திரம் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயம் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நாட்டு மக்களுக்கு பல உண்மைகளை உணர்த்தியுள்ளது.   சீனா தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்து பொய் என்பது  திட்டவட்டமாக வெளிப்பட்டுள்ளது. இதேவேளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement