• Jun 26 2024

ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ராஜபக்ஷா்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்! – எஸ்.பி. அட்வைஸ்

Chithra / Jun 17th 2024, 9:06 am
image

Advertisement

 

ரணில் விக்கமசிங்கவை வேட்பாளராக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க தொிவித்துள்ளாா்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கமசிங்கவை தேர்ந்தெடுப்பார்களாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்றவர்களும், ஏனைய சிறு சிறு கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையும்.

அவ்வாறு இல்லாது, பொதுஜன பெரமுன தனியொரு நபரை நிறுத்துமாக இருந்தால் நான்கில் ஒரு பங்குகூட பெறாது தோல்வியை சந்திக்கும்.

எனவே இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

எனவே, ஒரு அடி பின்னால் வைத்து நாட்டைப்பற்றி சிந்தித்து ராஜபக்ஷர்கள் முடிவொன்றை எடுக்க வேண்டும்.

எனவே அவர்கள் ரணில் விக்கிமசிங்கவுடன் ஒரு தீர்மானத்திற்கு வந்து, ரணிலை வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் நல்லது என நான் நினைக்கின்றேன்.

ரணில் விக்கிமசிங்க வானத்தில் இருப்பதைபோன்று கற்பனையில் இருக்கின்றார். ஒரு நாள் பாதாளத்திற்குள் விழப்போவதை அறியாதுள்ளார்.

எனவே, ரணிலும் அவருடன் இருப்பவர்களும், எடுக்கவேண்டிய முழு முயற்சிகளையும் முன்னெடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நிற்க முன்வர வேண்டும்.

ஆகவே பொதுஜன பெரமுனவும், ரணில் விக்கிமசிங்கவும் ஒருமனதாக தீர்மானித்து முடிவொன்றை எடுக்க வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிமசிங்க இருந்தால் எம்மால் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியும் என அவர் மேலும் தொிவித்தார்.

ரணிலை வேட்பாளராக்குவது குறித்து ராஜபக்ஷா்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் – எஸ்.பி. அட்வைஸ்  ரணில் விக்கமசிங்கவை வேட்பாளராக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பி.திஸாநாயக்க தொிவித்துள்ளாா்.ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கமசிங்கவை தேர்ந்தெடுப்பார்களாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்றவர்களும், ஏனைய சிறு சிறு கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையும்.அவ்வாறு இல்லாது, பொதுஜன பெரமுன தனியொரு நபரை நிறுத்துமாக இருந்தால் நான்கில் ஒரு பங்குகூட பெறாது தோல்வியை சந்திக்கும்.எனவே இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கியமாக ராஜபக்ஷர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.எனவே, ஒரு அடி பின்னால் வைத்து நாட்டைப்பற்றி சிந்தித்து ராஜபக்ஷர்கள் முடிவொன்றை எடுக்க வேண்டும்.எனவே அவர்கள் ரணில் விக்கிமசிங்கவுடன் ஒரு தீர்மானத்திற்கு வந்து, ரணிலை வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் நல்லது என நான் நினைக்கின்றேன்.ரணில் விக்கிமசிங்க வானத்தில் இருப்பதைபோன்று கற்பனையில் இருக்கின்றார். ஒரு நாள் பாதாளத்திற்குள் விழப்போவதை அறியாதுள்ளார்.எனவே, ரணிலும் அவருடன் இருப்பவர்களும், எடுக்கவேண்டிய முழு முயற்சிகளையும் முன்னெடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நிற்க முன்வர வேண்டும்.ஆகவே பொதுஜன பெரமுனவும், ரணில் விக்கிமசிங்கவும் ஒருமனதாக தீர்மானித்து முடிவொன்றை எடுக்க வேண்டும்.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிமசிங்க இருந்தால் எம்மால் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியும் என அவர் மேலும் தொிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement