• Jun 26 2024

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம்...! கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பூரண ஆதரவு...!

Sharmi / Jun 17th 2024, 9:08 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்றையதினம்(16) காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

சுமார் 200க்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பற்றினார்கள்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன. 

தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், ஜோதிலிங்கம், ரவீந்திரன், இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் தமிழ் பொதுவேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதாக பொதுக்கூட்டத்தில் பங்குபற்றிய அமைப்புக்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம். கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பூரண ஆதரவு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்றையதினம்(16) காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியது.சுமார் 200க்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பற்றினார்கள். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன. தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், ஜோதிலிங்கம், ரவீந்திரன், இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தமிழ் பொதுவேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதாக பொதுக்கூட்டத்தில் பங்குபற்றிய அமைப்புக்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement