• Jan 19 2026

கத்தார் வாழ் இலங்கை மக்களின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு முயற்சி வெற்றிகரமாக நிறைவு!

dileesiya / Dec 6th 2025, 5:51 pm
image

கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (FSMA) இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக மேற்கொண்ட நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு முயற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.


கடந்த டிசம்பர் 02 முதல் 05 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மனிதாபிமான முயற்சியில் கத்தார் வாழ் இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.


இந்த முயற்சியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியமான பல நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. அவற்றில் கல்வி உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள் உள்ளிட்ட பல முக்கியப் பொருட்கள் அடங்கும்.


கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த நிவாரண சேகரிப்பிற்குப் பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளது. சேகரிக்கப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களும் விரைவில் சரியான முறையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கத்தார் வாழ் இலங்கை மக்களின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு முயற்சி வெற்றிகரமாக நிறைவு கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (FSMA) இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக மேற்கொண்ட நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு முயற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.கடந்த டிசம்பர் 02 முதல் 05 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மனிதாபிமான முயற்சியில் கத்தார் வாழ் இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.இந்த முயற்சியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியமான பல நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. அவற்றில் கல்வி உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள் உள்ளிட்ட பல முக்கியப் பொருட்கள் அடங்கும்.கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த நிவாரண சேகரிப்பிற்குப் பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளது. சேகரிக்கப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களும் விரைவில் சரியான முறையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement