• Sep 20 2024

ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போகும் அபாயம்! முக்கியஸ்தர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Apr 9th 2023, 3:26 pm
image

Advertisement

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் அபாயம் ஏற்படும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்,

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முஜிபர் ரஹ்மான், இந்த சட்டத்துக்கு நாட்டு மக்களின் எதிர்ப்புடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச எதிர்ப்பும் இருப்பதாக தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்றை சமர்ப்பித்து வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இந்நாட்டின் சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வெளிநாட்டு அமைப்புக்கள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு சட்டத்திற்கு எதிராகவும் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன், இந்தச் சட்டமூலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்கவும், தமக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவும் அரசாங்கம் முயற்சிப்பதையும் காண்கிறோம்.


குறிப்பாக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிய போது, அதை பொருட்படுத்தாது அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விதிகளை நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை நசுக்கும் முயற்சியில் ஈடுபட முயற்சிப்பதாகவே நாம் கண்கிறோம்.

மேலும், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களை ஒடுக்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி,நாட்டு மக்களின் எதிர்ப்புடன்,ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச எதிர்ப்பும் இருப்பதால், இதையும் தாண்டி இந்த சட்டமூலத்தை அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தால் ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் அபாயமுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்

ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போகும் அபாயம் முக்கியஸ்தர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் samugammedia புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் அபாயம் ஏற்படும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்,கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முஜிபர் ரஹ்மான், இந்த சட்டத்துக்கு நாட்டு மக்களின் எதிர்ப்புடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச எதிர்ப்பும் இருப்பதாக தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்றை சமர்ப்பித்து வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நாட்டின் சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வெளிநாட்டு அமைப்புக்கள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு சட்டத்திற்கு எதிராகவும் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.அத்துடன், இந்தச் சட்டமூலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்கவும், தமக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவும் அரசாங்கம் முயற்சிப்பதையும் காண்கிறோம்.குறிப்பாக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிய போது, அதை பொருட்படுத்தாது அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விதிகளை நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை நசுக்கும் முயற்சியில் ஈடுபட முயற்சிப்பதாகவே நாம் கண்கிறோம்.மேலும், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களை ஒடுக்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தற்போதைய நிலவரப்படி,நாட்டு மக்களின் எதிர்ப்புடன்,ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச எதிர்ப்பும் இருப்பதால், இதையும் தாண்டி இந்த சட்டமூலத்தை அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தால் ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் அபாயமுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement