• Sep 20 2024

கிளிநொச்சியில் ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகம் கவனயீர்ப்பு!

Sharmi / Dec 21st 2022, 11:00 am
image

Advertisement

பாடசாலை செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

குறித்த போராட்டம் நேற்றையதினம்(20)  காலை பிரதான வாயிலை மூடி இடம்பெற்றது. இதன்போது உள்ளே செல்ல விடாது மாணவர்கள் பிரதான வாயிலை மறித்து போராட்டதில் ஈடுபட்டனர்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு வருகை தந்த போது அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் பாடசாலை முதல்வர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்து  குறித்த ஆசிரியரை பாதுகாப்பாக அழைத்து சென்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பாடசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதுதல் முறையற்ற விடயங்களில் ஈடுபடுதல் என குறித்த ஆசிரியர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அமல்ராஜ் வருகை தந்து அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,பாடசாலை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்குமாறும் பணித்தார்.

இந்த நிலையில் மீண்டும் எதிர்ப்பு எழுத்த நிலையில், பாடசாலை முதல்வர் பிரதான வாயிலை திறந்து மாணவர்களை உள்ளே செல்லுமாறு பணித்தார். அமைதியாக மாணவர்கள் உள்ளே சென்றனர்.

தொடர்ந்து,பாடசாலை சமூகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகம் கவனயீர்ப்பு பாடசாலை செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.குறித்த போராட்டம் நேற்றையதினம்(20)  காலை பிரதான வாயிலை மூடி இடம்பெற்றது. இதன்போது உள்ளே செல்ல விடாது மாணவர்கள் பிரதான வாயிலை மறித்து போராட்டதில் ஈடுபட்டனர்.குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு வருகை தந்த போது அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் பாடசாலை முதல்வர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்து  குறித்த ஆசிரியரை பாதுகாப்பாக அழைத்து சென்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.பாடசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதுதல் முறையற்ற விடயங்களில் ஈடுபடுதல் என குறித்த ஆசிரியர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.தொடர்ந்து, கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அமல்ராஜ் வருகை தந்து அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,பாடசாலை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்குமாறும் பணித்தார்.இந்த நிலையில் மீண்டும் எதிர்ப்பு எழுத்த நிலையில், பாடசாலை முதல்வர் பிரதான வாயிலை திறந்து மாணவர்களை உள்ளே செல்லுமாறு பணித்தார். அமைதியாக மாணவர்கள் உள்ளே சென்றனர்.தொடர்ந்து,பாடசாலை சமூகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement