ஓமானில் இருந்து 22 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்குமதி செய்யப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக விவாசய அமைச்சர் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது 19ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு 4ஆயிரத்து 500 ரூபா விலைக் குறைப்புடன் 15ஆயிரம் ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யூரியாவுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல். உரங்களின் விலை 4,500 ரூபாவால் குறைப்பு.samugammedia ஓமானில் இருந்து 22 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்குமதி செய்யப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதேவேளை உரங்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக விவாசய அமைச்சர் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்தார்.அத்துடன் தற்போது 19ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்.வி.பி உரம் மூடையொன்றுக்கு 4ஆயிரத்து 500 ரூபா விலைக் குறைப்புடன் 15ஆயிரம் ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.