• Apr 18 2026

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-உயிரிழந்த வியாபாரி!

Ziya / Feb 21st 2026, 2:47 pm
image

மாத்தறை,  கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில்  உள்ள ஒரு சுப்பர் ஒன்றிற்கு அருகில் இன்று (21  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது  நபர் ஒருவர் சுப்பர் மார்க்கெட்க்கு முன்னால் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த போது, ​​கார் ஒன்றில் வந்த  வந்த இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் போது காயமடைந்த நபரினை  சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சாம்பல் நிற கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நபர்களினால் 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 'டிலைட்' என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது. 

இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன்,இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-உயிரிழந்த வியாபாரி மாத்தறை,  கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில்  உள்ள ஒரு சுப்பர் ஒன்றிற்கு அருகில் இன்று (21  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தின் போது  நபர் ஒருவர் சுப்பர் மார்க்கெட்க்கு முன்னால் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த போது, ​​கார் ஒன்றில் வந்த  வந்த இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதன் போது காயமடைந்த நபரினை  சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,சாம்பல் நிற கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு நபர்களினால் 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 'டிலைட்' என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது. இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன்,இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement