வங்கியொன்றில் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 16,000 ரூபாய் பணம் சூரையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் கடந்த கடந்த 3 ம் திகதி மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மஸ்கெலியா மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்த நபரொருவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரைத் தொடர்ந்து நேற்றையதினம்(08) சந்தேகத்திற்கு இடமான முறையில் மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் தன்னியக்க இயந்திரம் பகுதியில் நடமாடிய யுவதி ஒருவரை கைது செய்து விசாரணை செய்த மஸ்கெலியா பொலிஸார், சந்தேக நபரான யுவதியை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அதேவேளை, வங்கிகளில் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க செல்லும் அனைவரும் தங்களது பணத்தை மீள பெற வங்கி அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய நபர்களிடம் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் பெற உதவியை நாடவேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டார்.
தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை. வங்கியொன்றில் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 16,000 ரூபாய் பணம் சூரையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் கடந்த கடந்த 3 ம் திகதி மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மஸ்கெலியா மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்த நபரொருவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரைத் தொடர்ந்து நேற்றையதினம்(08) சந்தேகத்திற்கு இடமான முறையில் மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் தன்னியக்க இயந்திரம் பகுதியில் நடமாடிய யுவதி ஒருவரை கைது செய்து விசாரணை செய்த மஸ்கெலியா பொலிஸார், சந்தேக நபரான யுவதியை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.அதேவேளை, வங்கிகளில் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க செல்லும் அனைவரும் தங்களது பணத்தை மீள பெற வங்கி அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய நபர்களிடம் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் பெற உதவியை நாடவேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டார்.