• May 05 2026

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை வரும் - ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

Chithra / May 5th 2026, 11:26 am
image

ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 


சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 


ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 


ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்னரை விட இப்போது நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார். 


இதற்கு முன்னரும் ட்ரம்ப் இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்திருந்ததுடன், கடந்த மாதம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 


ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க இராணுவத்தால் ஏழு ஈரானிய படகுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் 'ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 


நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளே உள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பயணித்து அமெரிக்க இராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ஆறு படகுகளும் ஐ.ஆர்.ஜி.சி யுடன் தொடர்புடையவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அவை சரக்குகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை

கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. 


கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பதிவான மிக மோசமான மோதல் நிலைமை இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இதன்படி, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 6.3 சதவீதத்தால், அதாவது 6.79 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 114.96 டொலர்களாக பதிவாகியுள்ளது. 


அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 4.2 சதவீதத்தால், அதாவது 4.23 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 106.17 டொலர்களாக உயர்ந்துள்ளது.


ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை வரும் - ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்னரை விட இப்போது நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார். இதற்கு முன்னரும் ட்ரம்ப் இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்திருந்ததுடன், கடந்த மாதம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க இராணுவத்தால் ஏழு ஈரானிய படகுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் 'ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளே உள்ளதாக அவர் தெரிவித்தார்.இதேவேளை ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பயணித்து அமெரிக்க இராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ஆறு படகுகளும் ஐ.ஆர்.ஜி.சி யுடன் தொடர்புடையவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவை சரக்குகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளைகடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பதிவான மிக மோசமான மோதல் நிலைமை இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 6.3 சதவீதத்தால், அதாவது 6.79 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 114.96 டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 4.2 சதவீதத்தால், அதாவது 4.23 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 106.17 டொலர்களாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement