ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டுக் கட்சி செயற்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்குச் சவால் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதையே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். சிலர் எதிர்த்த போதிலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் எவ்வித மாற்றமும் வராது. சஜித் பிரேமதாஸவே தலைவர். அவருக்கே மக்கள் ஆதரவு உள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி எமது அணிக்குச் சவால் கிடையாது ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டுக் கட்சி செயற்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்குச் சவால் கிடையாது.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதையே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். சிலர் எதிர்த்த போதிலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் எவ்வித மாற்றமும் வராது. சஜித் பிரேமதாஸவே தலைவர். அவருக்கே மக்கள் ஆதரவு உள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.