ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடாவுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 2025ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
"செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மக்களும் திறன்களும்" என்பது மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான கருப்பொருளாக அமைந்திருப்பதுடன்,
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும் திறனை வலுவூட்டுவதே இந்த மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான நோக்கம் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை மேம்படுத்தும் திட்டத்தின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும், பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொது மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அசூசா கொபோடா அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தார்.
அதற்கமைய தற்போதைய புதிய அரசியல் மாற்றத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அசூசா கொபோடாவை சந்தித்த சபாநாயகர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடாவுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 2025ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மக்களும் திறன்களும்" என்பது மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான கருப்பொருளாக அமைந்திருப்பதுடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும் திறனை வலுவூட்டுவதே இந்த மனித அபிவிருத்தி அறிக்கையின் பிரதான நோக்கம் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா குறிப்பிட்டார். பாராளுமன்றத்தை மேம்படுத்தும் திட்டத்தின் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும், பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொது மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அசூசா கொபோடா அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தார். அதற்கமைய தற்போதைய புதிய அரசியல் மாற்றத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.