• May 24 2025

துப்பாக்கி முனையில் நகை கொள்ளை கொள்ளையர்களின் விசித்திரம்- பொலிசாரின் அதிரடி

Thansita / May 24th 2025, 4:00 pm
image

கம்பஹா - தொம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நகைக்கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி 65 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில்  கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  பிரதான சந்தேகநபர் கையடக்கத்தொலைபேசி  மற்றும் மோட்டார் சைக்கிளுடன் பெலியத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வைத்திருந்த மற்றும் அவற்றை விற்பனை செய்ய முனைந்த மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் வலஸ்முல்ல பகுதிகளைச் சேர்ந்த 39 , 42 வயதுடையவர்கள் ஆவர்.

மேலும்  பிரதான சந்தேக நபர் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி முனையில் நகை கொள்ளை கொள்ளையர்களின் விசித்திரம்- பொலிசாரின் அதிரடி கம்பஹா - தொம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நகைக்கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி 65 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇந்த கொள்ளை சம்பவம் தொடர்பில்  கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  பிரதான சந்தேகநபர் கையடக்கத்தொலைபேசி  மற்றும் மோட்டார் சைக்கிளுடன் பெலியத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பிரதான சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வைத்திருந்த மற்றும் அவற்றை விற்பனை செய்ய முனைந்த மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் வலஸ்முல்ல பகுதிகளைச் சேர்ந்த 39 , 42 வயதுடையவர்கள் ஆவர்.மேலும்  பிரதான சந்தேக நபர் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement