• Dec 09 2024

இரண்டாவது நாளாக தொடரும் சுகாதார துறை பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்...!samugammedia

Sharmi / Feb 14th 2024, 11:17 am
image

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய  சுகாதாரதுறை பணியாளர்கள் நேற்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார துறையினர் 35 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைக்கோரி இன்று(14) இரண்டாவது நாளாக பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

இவ் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளி நோயாளர் பிரிவு, மருந்து விநியோகப் பிரிவு உள்ளிட்டவைகள் இயங்காமையால் தொலைதூரங்களில் இருந்து வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

அதேவேளை பணிபகிஷ்கரிப்பால் மூதூர் தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்,   சிற்றூழியர்கள்  , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும்(14)  (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ம் மற்றும் 16ம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்தமையுடன் நேற்றையதினமும்(13) சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்.

எனினும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள்  தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு , மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு  முகங்கொடுத்திருந்தனர்.


முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு பூராகவும் நடைபெறும் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவிலும் , இன்றையதினம் இரண்டாவது நாளாக பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள், பற்சிகிச்சை  பரிசோதனை என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதேவேளை தொலைதூரங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை


நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின்  பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இரண்டாம் நாள் தொடர்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ந்நிலையில் முப்படையினர்  வைத்தியசாலைகளில் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். 

35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் நேற்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இரண்டாவது நாளாக தொடரும் சுகாதார துறை பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்.samugammedia சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய  சுகாதாரதுறை பணியாளர்கள் நேற்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார துறையினர் 35 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைக்கோரி இன்று(14) இரண்டாவது நாளாக பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.இவ் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளி நோயாளர் பிரிவு, மருந்து விநியோகப் பிரிவு உள்ளிட்டவைகள் இயங்காமையால் தொலைதூரங்களில் இருந்து வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.அதேவேளை பணிபகிஷ்கரிப்பால் மூதூர் தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்,   சிற்றூழியர்கள்  , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும்(14)  (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ம் மற்றும் 16ம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்தமையுடன் நேற்றையதினமும்(13) சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர். எனினும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள்  தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு , மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு  முகங்கொடுத்திருந்தனர்.முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைமுல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடு பூராகவும் நடைபெறும் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவிலும் , இன்றையதினம் இரண்டாவது நாளாக பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள், பற்சிகிச்சை  பரிசோதனை என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.இதேவேளை தொலைதூரங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின்  பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இரண்டாம் நாள் தொடர்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் முப்படையினர்  வைத்தியசாலைகளில் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் நேற்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement