• Aug 29 2026

வடக்கில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்!

Chithra / Aug 29th 2026, 12:16 pm
image

 


சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இன்று (29) நண்பகல் 12.11 மணியளவில் பல்லவநாயகன்கட்டு, அக்கரயன்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.


இதனிடையே, கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இதேவேளை, கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.


காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவு முதல் திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் அவ்வப்போது காற்று வீசக்கூடும்.


மேலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வரையிலான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். இதனால் இப்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.


புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எனவே, குறித்த கடல் பிராந்தியங்களுக்குச் செல்லும் மீனவர்கள், கடல்சார் ஊழியர்கள் மற்றும் கடற்கரையை அண்மித்து வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

வடக்கில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்  சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று (29) நண்பகல் 12.11 மணியளவில் பல்லவநாயகன்கட்டு, அக்கரயன்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.இதனிடையே, கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.இதேவேளை, கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவு முதல் திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் அவ்வப்போது காற்று வீசக்கூடும்.மேலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வரையிலான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். இதனால் இப்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, குறித்த கடல் பிராந்தியங்களுக்குச் செல்லும் மீனவர்கள், கடல்சார் ஊழியர்கள் மற்றும் கடற்கரையை அண்மித்து வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement