பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர்,
மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவு நாமலுக்கு. மொட்டு கட்சி நம்பிக்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார்.கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.