• May 21 2025

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த தமிழ் தேசிய பேரவை

Chithra / May 20th 2025, 3:34 pm
image


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (20) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன், உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ.சரவணபவான், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் காலையில் சுவிஸ் நாட்டு தூதரரை சந்தித்தனர்


இதனை தொடர்ந்து பிற்பகலில் அமெரிக்க தூதரகத்தில் அந்த நாட்டு தூதுவரை சந்தித்து, தமிழ் மக்களுக்கு  சமஸ்டியிலான நிரந்தர தீர்வு மற்றும் வடக்கில்   தமிழ் மக்களின் காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். 

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த தமிழ் தேசிய பேரவை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (20) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது.இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன், உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ.சரவணபவான், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் காலையில் சுவிஸ் நாட்டு தூதரரை சந்தித்தனர்இதனை தொடர்ந்து பிற்பகலில் அமெரிக்க தூதரகத்தில் அந்த நாட்டு தூதுவரை சந்தித்து, தமிழ் மக்களுக்கு  சமஸ்டியிலான நிரந்தர தீர்வு மற்றும் வடக்கில்   தமிழ் மக்களின் காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். 

Advertisement

Advertisement

Advertisement