• Nov 19 2024

தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை பாரத் அருள்சாமிக்கு பெருவாரியாக பெற்றுக்கொடுக்கவேண்டும். - திகாம்பரம்

Chithra / Nov 10th 2024, 2:56 pm
image

 


கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இம்முறை எமது கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தம்பி பாரத் அருள்சாமிக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர் தம்பி பாரத் அருள்சாமிக்கு பெருவாரியாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு துரோகம் செய்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை காட்டுவார்கள். அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்காளர்கள் எந்தவகையிலும் தமது மனதிடத்தை இழக்காமல் தொடர்ந்தும் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டும்.

அதற்கு நான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியுடைய தலைவர்கள் உறுதுணையாக இருப்போம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது வேட்பாளர் பாரத் அருள்சாமி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

மலரவுள்ள எங்கள் ஆட்சியில் நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி உட்பட எல்லா பிரதேசத்திலும் இடை நிறுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு தயாரான நிலையில் இருக்கின்றோம் என்றார்.

தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை பாரத் அருள்சாமிக்கு பெருவாரியாக பெற்றுக்கொடுக்கவேண்டும். - திகாம்பரம்  கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இம்முறை எமது கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தம்பி பாரத் அருள்சாமிக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர் தம்பி பாரத் அருள்சாமிக்கு பெருவாரியாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு துரோகம் செய்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை காட்டுவார்கள். அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்காளர்கள் எந்தவகையிலும் தமது மனதிடத்தை இழக்காமல் தொடர்ந்தும் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டும்.அதற்கு நான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியுடைய தலைவர்கள் உறுதுணையாக இருப்போம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது வேட்பாளர் பாரத் அருள்சாமி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.மலரவுள்ள எங்கள் ஆட்சியில் நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி உட்பட எல்லா பிரதேசத்திலும் இடை நிறுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு தயாரான நிலையில் இருக்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement